• September 19, 2025
  • NewsEditor
  • 0

வெளியூர்களுக்கு பயணம் செய்து சுற்றுலா மேற்கொள்ளும் போது பல்வேறு இன்னல்களையும் சவால்களையும் பயணிகள் சந்திக்கின்றனர்.

அந்த வகையில் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் கோவாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு கசப்பான அனுபவத்தை பெற்றிருக்கிறார்.

இது குறித்து அவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். வைரலாகும் வீடியோவின் படி, தெற்கு கோவாவில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல ஒரு செயலி மூலம் டாக்ஸியை முன் பதிவு செய்திருக்கிறார்.

அந்த இடத்திற்கு ஆன்லைனில் புக் செய்த டாக்ஸி வந்துள்ளது. ஆனால் உள்ளூர் ஓட்டுநர்கள் அந்த டாக்ஸியை நகர விடாமல் தடுத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணையும் அந்த டாக்ஸியில் ஏற விடாமல் தடுத்துள்ளனர். இதனால் அந்த பெண் மழையில் பல கிலோமீட்டர் தூரம் உடைமைகளுடன் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அந்த பெண் கூறுகையில், ”சாதாரணமாக ரூ.1500 முதல் ரூ.1800 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் இடத்தில் அவர்கள் ரூ.3500 முதல் ரூ.4000 வரை கட்டணம் கேட்கிறார்கள். சரி, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் ஓட்டுநரையும் பயணிகளையும் கடுமையாக துன்புறுத்துகிறார்கள்.

மழையில் எனது உடைமைகளை தூக்கிக் கொண்டு பல கிலோமீட்டர் வரை நடந்தேன், இதில் முழுவதும் நான் நனைந்துவிட்டேன்” என்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ வைரலானதையடுத்து கோவா காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று டாக்ஸி ஓட்டுநர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *