
சென்னை: புதிதாக புழக்கத்தில் உள்ள 54 பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகளை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதிதாக புழக்கத்துக்கு வரும் ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக `சொல் புதிது' எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் 5-வது கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.