
புதுடெல்லி: “நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது.” என வாக்குத் திருட்டு 2.0 குற்றச்சாட்டை நேற்று முன்வைத்த ராகுல் காந்தி, இன்று அதே கருத்தை வலியுறுத்தி அடுக்கடுக்காக ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டு நடப்பதற்கு வாட்ச்மேன் போல் காவல் காத்திருந்ததாக காட்டமான கருத்தை பதிவு செய்துள்ளார்.
நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் ஒரு பகுதியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "காலை 4 மணிக்கு எழுந்திருங்கள், 36 வினாடிகளில் 2 வாக்காளர்களை நீக்குங்கள், பின்னர் மீண்டும் தூங்கச் செல்லுங்கள். வாக்கு திருட்டு இப்படித்தான் நடந்தது.