
செலிபிரிட்டிஸ், சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்ஸ் எனப் பலர் டிரெண்டிங் ஸ்டான்லி ஸிப்பர் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்.
சமீபத்தில் கூட, மதராஸி பட ஹீரோயின் ருக்மணி வசந்த் நிகழ்ச்சி ஒன்றில் இந்த மாதிரியான ஸிப்பரைப் பயன்படுத்தி இருந்தார்.
செலிபிரிட்டிஸ், இன்ஃப்ளூயன்ஸர்ஸைத் தாண்டி, பொது மக்களிடமும் இந்த ஸிப்பருக்கு தனி கிரேஸ் உண்டு.
ஸ்டான்லி மாதிரியான பல ஸிப்பர் சந்தைக்கு வந்துவிட்டாலும், ஸ்டான்லி ஸிப்பருக்கான மவுசு தனியாக இருந்துகொண்டே இருக்கிறது.
அப்படியான அமெரிக்கன் பிராண்ட் எப்படி இந்திய சந்தையைப் பிடித்தது… நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பிராண்ட் இரண்டு ஆண்டுகளில் திடீர் வைரலானது எப்படி?
Stanley Company உருவானது எப்படி?
உலகமே திரும்பிப் பார்க்கும் இந்த ஸ்டான்லி (Drink ware) பிராண்ட், 1913-ம் ஆண்டு வில்லியம் ஸ்டான்லி என்கிற மின் பொறியியலாளரால் துவங்கப்பட்டது ஆகும்.
வேலை பார்க்கும்போது, தான் குடிக்கும் காபி, எப்போதுமே சூடாக இருக்க வேண்டும் என்பது இவரது ஆசை. அதற்காக ஸ்பெஷல் கப் ஒன்றை டிசைன் செய்ய முடிவெடுத்துள்ளார்.
அடிப்படையில், இவர் ஒரு மின் பொறியியலாளர் என்பதால் மின் மாற்றிகளை (transformers) டெவலப் செய்வதற்கு என்று அவர் கற்ற கோட்பாடுகளை ஸ்டான்லி ஸிப்பர் தயாரிப்பதற்குப் பயன்படுத்தி உள்ளார்.
அப்படி கண்டுபிடித்த பிராண்டுக்கு தனது குடும்பப் பெயரான ‘ஸ்டான்லி’யையே வைத்துள்ளார்.
1916-ம் ஆண்டு வில்லியம் ஸ்டான்லி இறந்த பின், பல கைகளுக்கு இந்தக் கம்பெனி மாறி, தற்போது இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக டெரன்ஸ் ரெய்லி இருக்கிறார்.
முதன் முதலில் இன்சுலேடட் ஸ்டீம் ஃபிளாஸ்க்:
90-களில் வந்த முதல் ஆல்-ஸ்டீல் வாக்யூம் ஃபிளாஸ்க் (All-steam vaccum flask) இது தான். இதை இன்சுலேடட் ஃபிளாஸ்க் அல்லது தெர்மோஸ் என்றும் கூறுகிறார்கள்.
அதாவது, இந்த ஸிப்பரில் இருக்கும் பானங்கள் எந்த வெப்ப நிலையில் ஊற்றப்பட்டதோ, அதே வெப்பநிலையிலேயே மணிக்கணக்கில் இருக்கும். இதற்கு காரணம், அந்த ஸிப்பரில் இருக்கும் டபுள் வால் (Double Wall) டிசைன்.
அப்படி என்னதான் அந்த ஸிப்பரில் இருக்கு…?
முதல் உலகப் போரின்போது, அமெரிக்க ராணுவம் ஸ்டான்லி தெர்மோஸ்களை விமானங்களில் இருந்து கீழே போட்டும், கனரக வாகனங்களால் ஏற்றியும் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரில், குண்டுவீச்சு விமானிகள் ஸ்டான்லி தெர்மோஸ் புட்டிகளை உடன் எடுத்து சென்றிருக்கின்றனர்.
ஸ்டான்லி ஸிப்பரில் ஊற்றி வைக்கின்ற பானம் 9 மணி நேரத்திற்கும் மேலாக குளிராகவும், 5 மணி நேரத்திற்கும் மேலாக சூடாகவும், 40 மணி நேரத்திற்கும் மேலாக ஐஸ்டாக உறைந்தும் (iced) இருக்கின்றது.
கார் ஹோல்டரிலும் ஈசியாக ஃபிட்டாகி விடுகின்றது. சொல்லப்போனால், இது பிரீமியம் ப்ராடக்ட் மட்டுமல்ல…

ப்ரீ-பிரீமியம் (Pre-Premium) ப்ராடக்ட் ஆகவும் இருக்கிறது. இப்படி அசைக்க முடியாத உறுதியையும் லைஃப் டைம் வாரண்டியையும் கொண்டுள்ள இந்த ஸிப்பரை ஒருமுறை வாங்கினாலே போதும். அதை வைத்து வாழ்நாள் முழுவதும் ஓட்டி விடலாம்.
இந்த வசதி எல்லாம் இப்போது இல்லை. 90-களில் இருந்தே இருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக டிரெண்டில் இருப்பதற்கான காரணம், ‘ஒரு கார் விபத்து’.
கார் விபத்து Vs ஸ்டான்லி கப் :
டேனியல் என்ற பெண்ணின் கார் 2023-ம் ஆண்டு தீ விபத்தில் சிக்கியது.
காரே தீப்பிடித்து கருகி இருந்த நிலையில், டேனியலின் ஆரஞ்சு நிற ஸ்டான்லி ஸிப்பருக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், அந்த ஸிப்பரில் இருந்த ஐஸ்கட்டி கொஞ்சம் கூட உருகவில்லை. இந்தச் சம்பவத்தை அவர் டிக்டாக்கில் பதிவிட, அந்த வீடியோ வைரலாகி பல மில்லியன் லைக்குகளை அள்ளியிருந்தது.
இதன் விளைவாக, ஸ்டான்லி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்தப் பெண்ணுக்கு கார் மற்றும் நிறைய ஸ்டான்லி டம்ளர்களையும் பரிசாக வழங்கியிருக்கிறார்.
இதன் பிறகு தான், பலரும் ஸ்டான்லி ஸிப்பர்களைப் பற்றி தேட ஆரம்பித்துள்ளனர்.

#ஸ்டான்லி
இந்த கார் விபத்திற்கு பின், ஸ்டான்லி என்கிற ஹேஷ்டேக்கில் பதிவிடப்பட்ட வீடியோக்கள் பில்லியன் கணக்கில் ரீச் ஆகி உள்ளன. இதே ஹேஷ்டாக்கில் மக்கள் டசன் கணக்கில் ஸ்டான்லி ஸிப்பர் டம்ளர்களை வாங்கி, அவற்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்தும் உள்ளனர்.
குழந்தைகளுக்கு ஸ்டான்லி டம்ளர்களை பரிசளிப்பதும் டிரெண்ட் ஆனது. ஸ்டான்லியைப் போலவே இருக்கக்கூடிய, மற்ற ஸிப்பர்களை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; ஸ்டான்லி லோகோ கொண்ட ஸிப்பர்கள் தான் வேண்டும் என்று குழந்தைகளே அடம்பிடிக்கின்றன.
காதலர்கள் தினம் போன்ற ஸ்பெஷல் நாள்களில், காதலர்களுக்கு பரிசளிக்க… மேலை நாடுகளில் மால்களில் ஓடிச் சென்றும், கடைகளுக்கு உள்ளே குதித்தும் ஸ்டான்லி டம்ளர்கள் வாங்கிச் செல்லும் வீடியோக்கள் வைரல்.

ஒரு பக்கம் ஸ்டான்லி ஸிப்பர்களுக்கு ஆதரவு பெருகினாலும், இன்னொரு பக்கம் எதிர்ப்புகளும் எழுகின்றன.
ஒரு ஸ்டான்லி டம்லரின் விலையே கிட்டத்தட்ட 5,000 ரூபாய். தண்ணீர் அல்லது பானங்கள் குடிக்கும் டம்ளர், ஸிப்பர் அல்லது பாட்டில்கள் பிளாஸ்டிக், செம்பு அல்லது சாதாரண ஸ்டீல் பாட்டில் ஆகவோ இருக்கலாம்.
அது ஸ்டான்லி டம்ளராக தான் இருக்க வேண்டுமா? ஸ்டான்லி டம்ளர் ஒரு பாட்டிலாக இருந்து விட்டால் பிரச்னை இல்லை… அதுவே ஒரு ஸ்டேட்டஸாக மாறுகின்றது என்பது தான் பிரச்னை… லைஃப் டைம் வாரண்டி உள்ள ஸ்டான்லி டம்ளர்கள் ஒரு முறை வாங்கினாலே போதும் என்கிற பட்சத்தில், ஏன் டசன் கணக்கில் வாங்கிக் குவிக்க வேண்டும்… போன்ற பல கேள்விகளும், எதிர்ப்புகளும் எழுகின்றன.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…