• September 19, 2025
  • NewsEditor
  • 0

மனு லாவன்யா, மூத்த இயக்குநர் & தலைமைச் செயல்பாட்டு அதிகாரி, ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ்

ஆயுள் காப்பீடு (Life Insurance) என்பது, ஒருவரின் குடும்பத்தை பெரிய நிதி இழப்புகளில் இருந்து காக்கும் முக்கியமான கேடயம் ஆகும். ஆயுள் காப்பீட்டு பாலிசி வாங்குவதற்கு முன்பு, ‘சி.பி.ஆர்’ எனப்படும் ‘காப்பீட்டு நிறுவனத்தின் இழப்பீடுகள் வழங்கப்பட்ட விகிதம்’ (CPR- Claims Paid Ratio) எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

மனு லாவன்யா,
மூத்த இயக்குநர் & தலைமைச் செயல்பாட்டு அதிகாரி,
ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ்

இந்த விகிதம், ஒரு குறிப்பிட்ட காலத்தில் காப்பீட்டு நிறுவனம் பெற்ற மொத்த இழப்புக் கோரிக்கைகளில், எத்தனை கோரிக்கைகளுக்கு இழப்பீடு வழங்கியது என்பதைக் குறிக்கும் சதவிகிதம் ஆகும். இந்த விகிதம்தான், காப்பீட்டு நிறுவனம் எந்த அளவுக்குத் திறமையாகவும், நம்பகத் தன்மையுடனும் பாலிசிதாரரின் சோதனையான காலகட்டத்தில் தனது உறுதிமொழியைச் செயல்படுத்தி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

சி.பி.ஆர் 96.83%…

ஆயுள் காப்பீட்டின் முக்கிய நோக்கம் என்பது பாலிசி எடுத்திருப்பவருக்கு அசம்பாவிதம் நடக்கும்போது, குடும்ப உறுப்பினர்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்குவதாகும். இழப்பீடு வழங்கும் நடைமுறை கடினமாகவும், காலதாமதம் ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தால், காப்பீடு என்பது கசப்பான விஷயமாக மாறிவிடும். அதனால்தான் காப்பீடு வாங்குவதற்கு முன்பே நிறுவனத்தின் சி.பி.ஆர் பற்றிய விவரங்களை அறிந்து காப்பீடு எடுப்பது நல்லது. ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI-Insurance Regulatory and Development Authority of India) இணையதளத்தில் காப்பீடு நிறுவனங்களின் சி.பி.ஆர் விவரங்கள் இருக்கும். அதைப் பார்த்து சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.

2023-24 நிதி ஆண்டுக்கான ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியக் காப்பீட்டு நிறுவனங்களின் சராசரி சி.பி.ஆர் 96.83% ஆக உள்ளது. இதில் சிறப்பான அம்சம் என்னவென்றால், தனியார் துறை சார்ந்த காப்பீட்டு நிறுவனங்கள் கடந்த 6 ஆண்டுகளாக 99%-க்கு மேற்பட்ட சி.பி.ஆர் விகிதங்களைக் கொண்டிருக்கின்றன. இது காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசி மீதான உறுதிமொழி களை நிறைவேற்றுவதில் உள்ள அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுவதாக உள்ளது.

பாலிசிதாரர் நலன்களில் அக்கறை கொண்டு, எளிமையான க்ளெய்ம் நடைமுறைகளைக் காப்பீட்டு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். பாலிசிதாரர்கள் நிறுவனத் தரப்பைச் சுலபமாகத் தொடர்புகொள்ளும் வகையில் பல்வேறு வசதிகளைக் கொண்டிருப்பதும் அவசியம். க்ளெய்ம் நடைமுறைகளில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

1. விரைவான க்ளெய்ம் தீர்வுகள்…

பாலிசிதாரரின் குடும்பத்துக்கு விரைவாக இழப்பீடு வழங்குவது காப்பீட்டு நிறுவனத்தின் முக்கியமான கடமையாகும். க்ளெய்ம் நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேகமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும். டிஜிட்டல் முறையில் அதிக ஆவணங்கள் இல்லாமல் பாலிசிதாரர் சுலபமாக இழப்பீடு பெறும் நடைமுறைகளைக் காப்பீட்டு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.

2. குறைந்த அளவு நிராகரிப்புகள்…

சி.பி.ஆர் விகிதம் அதிகமாக இருந்தால், இழப்பீடு கோரிக்கைகள் குறைந்த அளவில் நிராகரிக்கப்படுகின்றன என்று அர்த்தம். அந்த வகையில், காப்பீட்டு நிறுவனம் நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மை உடைய க்ளெய்ம் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் நிராகரிப்பு விகிதம் குறையும்.

3. க்ளெய்ம் நடைமுறைகளில் புதிய உத்தி…

காப்பீட்டு நிறுவனங்கள் க்ளெய்ம் நடை முறைகளில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence-AI) பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

பாலிசிதாரர் மற்றும் அவரின் நாமினிகளுக்கு தாமே முன் வந்து உதவும் வகையில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன என்பது வரவேற்கத்தக்கது. இதனால், மனிதத் தலையீடு இல்லாமல் பெரும்பாலான நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் விரை வாகவும், குறைந்த ஆவணங்கள் மூலமும் இழப்பீட்டைப் பெற முடிகிறது.

புதிய பாலிசிக்கு விண்ணப்பிப்பது, க்ளெய்ம் நடைமுறை, பித்தலாட்டங்களைக் கண்டு பிடிப்பது ஆகிய அனைத்தும் தற்போது, ஏ.ஐ வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் காப்பீட்டைத் தவறாகப் பயன் படுத்துபவர்கள் தவிர்த்து, மற்றவர்களுக்கு விரைவாக இழப்பீடு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

4. பாலிசிதாரர்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்குவது…

காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களிடம் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நன்றாக வளர்ந்து வருகின்றன. முதல் முறை பாலிசி எடுத்துள்ள நபர்கள் முதல் குறைவான தொகைக்கு காப்பீடு எடுத்துள்ளவர்கள் வரை, க்ளெய்ம் மீதான அனைவருடைய கோரிக்கை களையும் சமமான அணுகுமுறையின் மூலம் இழப்பீடு கிடைப்பதைக் காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி செய்து வருகின்றன.

சமீபத்திய தரவுகளின்படி, கிராமப் பகுதி களைச் சேர்ந்த 39% இந்தியர்கள் இன்னும் எந்தவிதமான காப்பீடும் எடுக்கவில்லை. க்ளெய்ம் நடைமுறைகளில் ஏற்படும் பிரச்னைக்கு விரைவான தீர்வு கண்டு, காப்பீட்டின் பலன்கள் பாலிசிதாரருக்கு சென்றடைவதை நிறுவனங்கள் உறுதிப்படுத்து வதன் மூலமே பாலிசிதாரரின் சந்தேகம், நம்பிக்கையாக மாறும். அதை நோக்கி காப்பீடு நிறுவனங்கள் நகர வேண்டும். அனைத்துக் காப்பீட்டு நிறுவனங் களும் தங்களின் சி.பி.ஆர் விகிதத்தை மேம்படுத்த வேண்டும்.

5. அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கு…

நமது நாடு சுதந்திரம் அடைந்த 100 ஆண்டு களுக்குள் (2047-ம் ஆண்டுக்குள்) அனைத்து இந்தியர்களுக்கும் காப்பீடு கவரேஜ் வழங்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டு செயல்பட்டு வருகிறது, ஐ.ஆர்.டி.ஏ.ஐ. இந்த இலக்கை அடைவதற்கு காப்பீட்டு நிறுவனங் களின் பங்கு மிக முக்கியமாகும்.

6. வளரும் காப்பீட்டுச் சந்தை…

இந்திய ஆயுள் காப்பீட்டுச் சந்தையின் மதிப்பு வரும் 2027-ம் ஆண்டுக்குள் 200 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள காப்பீட்டு நிறுவனங் கள், நம்பிக்கையான மற்றும் சிறப்பான சேவைகளை நாட்டு மக்களுக்கு வழங்குவது அவசியமாகும். அதிக சி.பி.ஆர் விகிதத்தைக் கொண்டிருக்கும் நிறுவனம் அதன் நம்பகத்தன்மை காரணமாகத் தன்னுடைய மொத்த பாலிசிதாரரின் எண்ணிக் கையை அதிகரிக்க முடியும்.

டிஜிட்டல் முறையில் கே.ஒய்.சி சரிபார்ப்பு என்பது பாலிசி எடுப்பதைச் சுலபமாக்கி இருக்கிறது.

சி.பி.ஆர் என்பது காப்பீட்டு நிறுவனங்களின் நம்பிக்கை மற்றும் நாணயம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று கூறலாம். நமது நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் காப்பீட்டைக் கொண்டு சேர்ப்பதற்கு ஆயுள் காப்பீட்டின் அனுகூலங்களையும், சி.பி.ஆர் பற்றிய விழிப்புணர்வையும் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

மக்களும் ஆயுள் காப்பீடு எடுப்பதன் மூலம், அவரவர் குடும்பத்தின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். மேலும், காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யும் முன், மறக்காமல் நிறுவனத்தின் சி.பி.ஆர் என்ன என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். சி.பி.ஆர் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்குக் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைப்பது உறுதியாகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *