• September 19, 2025
  • NewsEditor
  • 0

கோலிவுட்டின் ‘மோஸ்ட் வாண்டட்’ இயக்குநர்களில் ஒருவராகியிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்குநராக அறிமுகமான ‘கோமாளி’ படத்தில், ரவி மோகன் – யோகி பாபு கூட்டணி பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு வித்தியாசமான களத்தில் ஒன்றிணைந்திருக்கிறது.

இம்முறை ரவி மோகன் படத்தின் இயக்குநர்; யோகி பாபு கதையின் நாயகன். அதாவது ஒரு முன்னணி ஹீரோவின் இயக்கத்தில் ஹீரோவாகியிருக்கிறார். இது பற்றி பற்றிக் குறிப்பிட்டுள்ள யோகி பாபு: “ ‘கோமாளி’ படப்பிடிப்பின் போது, ‘நான் படம் டைரக்ட் செய்தால், நீங்கதான் ஹீரோ’ என்றார். ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆறு வருடங்கள் கழித்து அதை ரவி மோகன் நிறைவேற்றிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *