
புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங், நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்கலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுவது தொடர்பான ஒரு செய்தியை பகிர்ந்து திக்விஜய சிங் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘இன்றைய மேம்பட்ட தொழில்நுட்ப யுகத்தில் நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்க முடியுமா? சற்று யோசித்துப் பாருங்கள். வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவின் தேர்தல்களை நடத்த வேண்டாமா?.