• September 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யின் பிறந்த நாளை முன்னிட்டு காசி விஸ்​வ​நாதர் கோயி​லில் சிறப்பு பூஜை, வழி​பாடு​கள் நடை​பெற்​றன. பிரதமர் நரேந்​திர மோடி நேற்று முன்​தினம் தனது 75-வது பிறந்த நாளை கொண்​டாடி​னார். இதையொட்டி உத்தர பிரதேசம், வாராணசி​யில் உள்ள காசி விஸ்​வ​ நாதர் கோயில் நிர்​வாகம் மற்​றும் கோயில் சேவைத் திட்​டத்​துடன் தொடர்​புடைய நிறு​வனங்​கள் மற்​றும் பல்​வேறு சேவை அமைப்​பு​கள் சார்​பில் பூஜை வழி​பாடு​கள் நடத்​தப்​பட்​டன.

கோயி​லின் பொதுச் செய​லா​ளர் சுவாமி ஜிதேந்​தி​ரானந்த சரஸ்​வதி சார்​பில் சஹஸ்​ரசண்டி வழி​பாடு, அகில பாரத சன்​யாசி பரிஷத் நடத்​தப்​பட்​டன. உத்தர பிரதேச முன்​னாள் அமைச்​சரும் தெற்கு வாராணசி​யின் எம்​எல்​ஏவு​மான நீல​காந்த் திவாரி தலை​மை​யில் 51 அறிஞர்​களின் உதவி​யுடன் யாகம் நடத்​தப்​பட்​டது. மேலும் நீல​காந்த் திவாரி தலை​மை​யில் 51 குவிண்​டால் லட்டு பிர​சாதம் விநி​யோகம் செய்​யப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *