• September 19, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாடக முன்​னாள் முதல்​வரும் முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான‌ சதானந்த கவு​டா​வின் வங்​கிக் கணக்கை ஆன்லைன் மூலம் ஹேக் செய்து ரூ.3 லட்​சம் திருடப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து பெங்​களூரு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசாரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதுகுறித்து முன்​னாள் முதல்​வர் சதானந்த கவுடா பெங்​களூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: புதன்​கிழமை காலை​யில் எனது செல்​போனுக்கு 3 வங்​கி​களிடம் இருந்து குறுஞ்​செய்தி வந்​தது. அதில் ஒவ்​வொரு வங்​கி​யில் இருந்​தும் தலா ரூ.1 லட்​சம் எடுக்கப்​பட்டு இருப்​ப​தாக கூறப்​பட்​டிருந்​தது. இதையடுத்து செல்​போன் செயலி மூலம் வங்கி கணக்கை ஆராய்ந்​த​போது, எனது வங்கி கணக்​கு​கள் மூன்​றும் ஹேக் செய்​யப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *