• September 19, 2025
  • NewsEditor
  • 0

நடிகர் சிம்பு இரங்கல்

டிடிவி தினகரன்  இரங்கல்

அண்ணாமலை இரங்கல்

திருமாவளவன் இரங்கல்

உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

ரோபோ சங்கர் இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் நடிகர் ரோபோ சங்கரின் இல்லத்தில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன், “சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

“பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ சங்கர், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரோபோ சங்கர் மறைவு:

ரோபோ சங்கர்
ரோபோ சங்கர்

ரோபோ சங்கர் தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி, 2007-ம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார்.

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தோன்றியதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள வீடுகளில் இடம்பிடித்தார்.

அதன்பின், வெள்ளித்திரையிலும் அசத்தினார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுஷின் மாரி உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழடைந்தார்.

தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த ரோபோ சங்கர், சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரோபோ சங்கர்
ரோபோ சங்கர்

தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்தார். ஆனால், மீண்டும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கல்லீரல் மற்றும் சீறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ரோபோ சங்கர் மறைவுக்கு திரையுலகினர், கலையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *