• September 19, 2025
  • NewsEditor
  • 0

கம்பம்: கேரள மாநிலத்​திலிருந்து கொண்​டு​வரப்​பட்ட எலெக்ட்​ரானிக்ஸ் கழி​வு​கள் கம்​பம் மலைச் சாலை​யில் கொட்​டப்​படு​வது குறித்து அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். தேனி மாவட்​டத்​தில் கேரளாவை இணைக்​கும் முக்​கிய வழித்​தட​மாக கம்​பம்​மெட்டு மலைப்​பாதை உள்​ளது. தமிழகத்​துடன் நேரடித் தொடர்​பில் உள்​ள​தால், அங்​கிருந்து குப்​பை, கழி​வு​கள் இரவில் கொண்​டு​வரப்​பட்​டு, தமிழக வனப்​பகு​தி​யில் அடிக்​கடி கொட்​டப்​படு​கின்றன.

கடந்த 4 நாட்​களுக்கு முன்பு கம்​பம்​மெட்டு மலை​யடி​வாரம் புதுக்​குளம் பகு​தி​யில், சக்​திவேல் என்​பவருக்​குச் சொந்​த​மான இடத்​தில் மூட்டை மூட்​டை​யாக கேரள குப்பை கொட்​டப்​பட்​டிருந்​தது. தகவலறிந்த மதுரை மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரிய சுற்​றுச்​சூழல் பறக்​கும்​படை பொறி​யாளர் பத்மா தலை​மையி​லான அதி​காரி​கள் ஆய்வு நடத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *