• September 19, 2025
  • NewsEditor
  • 0

கோவை: மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்​பும் ‘ககன்​யான்’ திட்​டத்​தின் சோதனை பணி​கள் 85 சதவீதம் நிறைவடைந்​துள்​ள​தாக இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்​ரோ) தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்​பும் ‘ககன்​யான்’ திட்​டத்​தில் கவனம் செலுத்தி வரு​கிறோம். இந்த திட்​டம் 2018-ல் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வித்த திட்​டம்.

இவ்​வாண்டு ஆளில்லா விண்​கலத்​தில் ‘வயோமித்​ரா’ என்ற இயந்​திர மனிதனை அனுப்ப உள்​ளோம். டிசம்​பர் மாத இறு​தி​யில் இந்​நிகழ்வு நடை​பெறும். தொடர்ந்​து, இரண்டு ஆளில்லா ராக்​கெட்​களை அனுப்​ப​வும், 2027 மார்ச் மாதம் மனிதர்​களை அனுப்​ப​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *