
சென்னை: அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்கவும் தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார். கடந்த செப்.13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், செப்டம்பர் 20-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை ஒவ்வோரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.