
புதுடெல்லி: கர்நாடகாவின் ஆலந்த் (Aland) தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இத்தகைய திருத்தத்தின் மூலம் வாக்காளர்கள் பலரின் பெயர்கள் பட்டியலில் இருந்து திட்டமிட்ட ரீதியில் நீக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.