
புதுச்சேரி: மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க கூட்டத்தை கூடுதல் நாட்கள் நடத்தக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து திமுக, காங்கிரஸ், சுயேட்சை எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
புதுவை சட்டப்பேரவை இன்று (வியாழக்கிழமை) கூடியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக பேரவைத்தலைவர் செல்வம் இரங்கல் குறிப்புகளை வாசித்து,பேரவை முன்பு முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்யவேண்டிய ஏடுகளை சமர்பிக்கும்படி கோரினார். அப்போது சுயேட்சை எம்எல்ஏ நேரு குறுக்கிட்டு, சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் எனது தொகுதியில் 6-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதுபற்றி விவாதிக்க வேண்டும். இதற்காக சபையை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.