• September 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழ்​நாடு மின்​வாரி​யத்​தில் தின​மும் தரவு உள்​ளீட்டு பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இதற்​காக உரிமம் பெற்ற ஒப்​பந்​த​தா​ரர் வாயி​லாக, ஒப்​பந்த முறை​யில் தரவு உள்​ளீட்​டாளர்​களை (டேட்டா எண்ட் ஆப்​ரேட்​டர்​கள்) நியமித்து பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இந்த பணி​யாளர்​களுக்கு மாதத்​துக்கு அதி​கபட்​ச​மாக ரூ.20,310 ஊதி​யம் வழங்​கப்​பட்டு வந்​தது.

இந்​நிலை​யில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்​தில் சென்னை மாவட்ட ஆட்​சி​யரகம் ஒப்​பந்த பணி​யாளர்​களுக்​கான ஊதி​யத்தை உயர்த்​தி​யது. இதுகுறித்​து, மின்​வாரிய தலைமை பொறி​யாளர்​கள், மேற்​பார்வை பொறி​யாளர்​களின் கருத்​துகள் கேட்​கப்​பட்​டு, ஊதி​யத்தை உயர்த்தி வழங்க மின்​வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. அதன்​படி, தரவு உள்​ளீட்டு ஒப்​பந்த பணி​யாளர்​களுக்கு நாளொன்​றுக்கு ரூ.718 ஆக உயர்த்​த​வும், இது மாதத்​துக்கு ரூ.21,540க்கு மிகாமல் இருக்க வேண்​டும் என உத்​தர​விடப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *