
புதுடெல்லி: “ஒரு மாதம் சண்டை நிறுத்தம் செய்கிறோம். இந்தக் கால கட்டத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்” என்று மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் இருந்து மாவோயிஸ்ட்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார். அதன்படி, உள்ளூர் போலீஸார், கோப்ரா கமாண்டோக்கள், சிஆர்பிஎப் வீரர்கள் என பெரும் பட்டாளம், மாவோயிஸ்ட் ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.