• September 18, 2025
  • NewsEditor
  • 0

”மலட்டுத்தன்மைக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இன்றைய தலைமுறையினரிடம் அதிகரிக்கும் தவறான உணவுப்பழக்கம்தான் முக்கியக் காரணம்.

அது, ஆண்களின் பாலியல் ஹார்மோனான `டெஸ்டோஸ்டீரான்’ சுரப்பை பாதித்து, தந்தையாகும் வாய்ப்பு குறையக் காரணமாக இருக்கிறது’’ என்கிறார் டயட்டீஷியன் கற்பகம்.

டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனின் முக்கியத்துவம் பற்றியும், அதன் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள் பற்றியும் விளக்குகிறார் அவர்.

Men’ Health

“ஆண், பெண் இருவர் உடல்களிலும் டெஸ்டோஸ்டீரான் இருக்கிறது. இது, அட்ரீனலின் சுரப்பி மற்றும் விரைப்பைகளிலிருந்து சுரக்கிறது.

பெண்களிடம் மிகவும் குறைவாகவும், ஆண்களிடம் அதிகமாகவும் காணப்படும் இந்த ஹார்மோன்தான் ஆண்களுக்குத் தனித்துவமான குரலைத் தருகிறது; முகத்தில் தாடி, மீசையை வளரச் செய்கிறது; தலைமுடி வளரவும், விந்தணுக்களை உற்பத்தி செய்யவும் காரணமாகிறது.

அதனால்தான் இந்த ஹார்மோனை ‘ஆண் பாலியல் ஹார்மோன்’ என்கிறது மருத்துவம். ஆணின் விந்தணு உற்பத்தி, தசை அடர்த்தி, எலும்புகளின் ஆரோக்கியம், ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தி போன்ற பல்வேறு பணிகளிலும் இது முக்கியப் பங்காற்றுகிறது.

வயது அதிகரிக்கும்போது இந்த ஹார்மோன் சுரப்பது குறையத் தொடங்கிவிடும். சிலருக்கு இளம் வயதில் தவறான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதாலும் டெஸ்டோஸ்டீரான் சுரப்பது குறையத் தொடங்கும்.

இதனால், ஆண்களுக்கு விரைப்புத்தன்மை அடைவதிலும், விந்தணு உற்பத்தியிலும் குறைபாடு ஏற்பட்டு தாம்பத்ய உறவில் பிரச்னை ஏற்படும். அத்துடன் எலும்பு மற்றும் தசைகள் வலிமை இழப்பது என வேறு பல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.

Men' health
Men’ health

கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின் டி, மக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துகள் உள்ள உணவுகள் டெஸ்டோஸ்டீரான் சுரப்பை ஊக்கப்படுத்தும்.

அதிகப்படியான உடல் பருமன், அதிக மன அழுத்தம் போன்றவற்றால் இந்த ஹார்மோன் சுரப்பு குறையும்.

குறிப்பாக, ‘கார்டிசால்’ ஹார்மோனின் அளவு உடலில் அதிகரித்தாலும், இதன்் அளவு குறைந்துவிடும். இதன் அளவை அதிகரிக்க உதவும் சில உணவுகளை ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

மாதுளை: மாதுளையிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும். மாதுளையை ஜூஸாக்கி அருந்துவதைவிட அப்படியே பழமாகச் சாப்பிடுவது நல்லது.

சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை கார்டிசால் அளவைக் குறைத்து, டெஸ்டோஸ்டீரானை அதிகரிக்கச் செய்யும்.

Balance diet
Balance diet

மீன்: மீன் உள்ளிட்ட கடல் உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் டி நிறைவாக உள்ளன. இவற்றை அடிக்கடிச் சாப்பிட்டு வரலாம்.

முட்டை: முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி இருக்கிறது. இது டெஸ்டோஸ்டீரான் சுரப்பைத் தூண்டக்கூடியது. ஆண்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது.

நட்ஸ்: பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. அத்துடன் இவற்றிலுள்ள சாச்சுரேட்டடு, மோனோ அன்சாச்சுரேட்டடு கொழுப்புகள் டெஸ்டோஸ்டீரான் உற்பத்திக்கு உதவக்கூடியவை.

கீரை வகைகள்: கீரைகளில் டெஸ்டோஸ்டீரானை அதிகரிக்கும் மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன. எனவே, வாரம் இரண்டு முறையாவது கீரை உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

பூசணி
பூசணி

பால்: பாலில் கால்சியம் மட்டுமன்றி வைட்டமின் டி சத்தும் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் வலிமையடையும்; ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

பூசணி விதைகள்: பூசணி விதைகளில் துத்தநாகச் சத்து நிறைந்திருக்கிறது. அவ்வப்போது இதை வறுத்து ஸ்நாக்ஸ்போலச் சாப்பிடலாம்.

தினமும் 6 முதல் 8 மணி நேரம்வரை தூக்கம், 30 நிமிட உடற்பயிற்சி, மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துதல், 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். துரித உணவுகள், பிளாஸ்டிக் கன்டெய்னர் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *