
ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரிடம் கமல்ஹாச னுடன் இணைந்து நடிக்க இருக்கும் படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
அவர் கூறும்போது, “அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் இரண்டுக்கும் சேர்த்து ஒரு படம் பண்ண போகிறேன். இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்குச் சரியான கதை, கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். கிடைத்தால் நடிப்போம்” என்றார்.