• September 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்​வேறு நாடு​களின் அதிபர்​கள், பிரதமர்​கள், ஆன்​மிகத் தலை​வர்​கள் உள்​ளிட்​டோர் வாழ்த்து தெரிவித்​துள்​ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரதமர் மோடி ட்ரம்​புக்கு முன்னதாகவே சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டு​விட்​டார். அதில், “எனக்கு தொலைபேசி​யில் பிறந்த நாள் வாழ்த்து தெரி​வித்த என் நண்​பர், அதிபர் ட்ரம்​புக்கு நன்​றி. உங்​களைப் போல​வே, இருதரப்பு உறவை புதிய உச்​சத்​துக்கு எடுத்​துச் செல்​வதற்கு நானும் உறுதியாக இருக்​கிறேன். ரஷ்​யா-உக்​ரைன் போருக்கு அமைதி தீர்வு கிடைக்க வேண்​டும் என்ற உங்​கள் முயற்​சிக்கு எங்​கள் ஆதரவு உண்டு" என்று தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *