
பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இந்த அறிவிப்பு பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு புதன்கிழமை அன்று வெளியானது.
இந்த படத்துக்கு ‘மா வந்தே’ என பெயரிட்டுள்ளது படக்குழு. ‘ஒரு தாயின் கீதம்’ என்ற டேக்லைனும் இதில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் மோடியின் பால்ய காலம் முதல் தேசிய தலைவரானது வரையிலான அவரது வாழ்க்கை சொல்லப்பட இருப்பதாக தெரிகிறது. இதில் பிரதமர் மோடிக்கும், அவரது தாயார் ஹீராபென் மோடிக்கும் இடையிலான உறவு குறித்தும் சொல்லப்பட உள்ளதாக தகவல்.