• September 17, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வரையும் சேர்த்து மொத்தம் 6 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில், முதல்வர் உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் என்.ஆர்.காங்கிரஸ் வைத்துக்கொண்ட நிலையில், இரண்டு அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவிகள் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டன.

முதல்​வ​ராக 2021 மே 7-ல் ரங்​க​சாமி பொறுப்​பேற்ற நிலை​யில், அதன் பிறகு 50 நாட்​கள் கழித்து ஜூன் 27-ல் தான் மற்ற அமைச்​சர்​கள் பொறுப்​பேற்​ற​னர். பாஜக-​வில் முதலில் நமச்​சி​வாய​மும், சாய் ஜே.சர​வணன்​கு​மாரும் அமைச்​சர்​களாகப் பொறுப்​பேற்​றார்​கள்.

இதையடுத்​து, பாஜக எம்​எல்​ஏ-​வான ஜான்குமாருக்கு அமைச்​சர் பதவி கிடைக்​காததைக் கண்​டித்து அவரது ஆதர​வாளர்​கள் பாஜக அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டனர். ஆனாலும், வேலை நடக்​க​வில்​லை. எனினும் ஜான்குமார் அமைச்​ச​ராகும் முயற்​சிகளை தொடர்ந்து கொண்டே இருந்​தார். இதனிடையே, அமைச்​சர் மற்​றும் வாரி​யத் தலை​வர் பதவி​களை எதிர்​பார்த்து ஏமாந்து போன பாஜக எம்​எல்​ஏ-க்​கள், சுயேச்​சைகள் சிலரை சேர்த்​துக் கொண்டு தனி அணி​யாக செயல்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *