
சென்னை: 'என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்' என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதப்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவியான பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “பிரபல உணவு தயாரிப்பு மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு உணவு வழங்கும் மாதம்பட்டி ரங்கராஜ் என்னையும், என் குழந்தையையும் நீதிமன்றம் வரவழைத்து விட்டார். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் காரணம். அதற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.