• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், இது​வரை 12,255 தெரு நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: மாநக​ராட்சி சார்​பில் தெரு​நாய்​களின் இனப்பெருக்கத்தைக் கட்​டுப்​படுத்​த​வும், வளர்ப்பு நாய்​களை முறைப்​படுத்​தவும் நடவடிக்​கைகள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன. கடந்த ஒரு மாதத்​தில் மட்​டும் சிறப்பு முகாம்​களின் வாயி​லாக 46,122 தெரு நாய்​களுக்கு வெறி​ நோய் (ரேபிஸ்) தடுப்​பூசி மற்​றும் அக, புற ஒட்​டுண்ணி நீக்​கம் மருந்து செலுத்​தப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *