
பீட்: மகாராஷ்டிராவின் பீட், அகில்யா நகர், நந்தட், ஜல்னா, சத்திரபதி சம்பாஜி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. மராத்வாடா பகுதியில் உள்ள 11 அணைகளில் இருந்து 3.42 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மழை பாதிப்பு காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். இங்கு தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 12 குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 120 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.