• September 17, 2025
  • NewsEditor
  • 0

குவாஹாட்டி: இந்​துக்​களின் இடங்​களை வேறு பிரி​வினருக்கு சட்​ட​விரோத​மாக மாற்றிக் கொடுத்து ஊழலில் ஈடு​பட்ட அசாம் அதி​காரி கைது செய்​யப்​பட்​டார். அசாம் சிவில் சர்​வீஸ் அதி​காரி நூபூர் போரா. இவர் கம்​ரூப் மாவட்​டத்​தின் கோராய்​மாரி பகுதியில் வட்​டார அதி​காரி​யாக 6 ஆண்​டு​கள் பணி​யாற்​றி​னார். இவர் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​துள்​ளார் என முதல்​வர் அலு​வல​கத்​துக்கு ஊழல் புகார்​கள் வந்​தன.

மேலும் இவர் பர்​பேட்டா மாவட்​டத்​தில் பணி​யாற்​றிய​போது, இந்​துக்​களின் இடங்​களை வேறு பிரி​வினருக்கு சட்​ட​விரோத​மாக மாற்​றிக் கொடுத்​தார் எனவும் குற்​றச்​சாட்டு கூறப்​பட்​டது. இதையடுத்து நூபூர் போரா வீட்​டில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அப்​போது அவரது வீட்​டில் ரூ.1 கோடி ரொக்​கம், பல லட்​சம் மதிப்​பிலான வைர நகைகள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக எஸ்​.பி. ரோசி கலிதா தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *