• September 17, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: ​பாமக தலை​வர் அன்​புமணி என தேர்​தல் ஆணை​யம் கூற​வில்​லை. பாமக தலைமை அலு​வல​கத்​தின் முகவரியை மாற்றி மோசடி செய்​துள்​ளனர் என்று கட்​சி​யின் கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி கூறி​னார். திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள கடிதத்​தில் பிஹார், தமிழ்​நாடு, புதுச்​சேரி மாநிலங்​களில் பாமக​வுக்கு மாம்​பழச் சின்​னம் ஒதுக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அந்த கடிதத்​தின் முகவரி ‘தலை​வர், பாமக, எண் – 10, திலக் தெரு, தி.நகர், சென்னை – 17’ என உள்​ளது. பாமக அலு​வலக முகவரி மாற்​றம் ராம​தாஸுக்கு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. பாமக​வின் நிரந்தர முகவரி ‘63 நாட்​டு​முத்து நாயக்​கன் தெரு, தேனாம்​பேட்​டை, சென்​னை’ என்​பது​தான். சூழ்ச்​சி​யால் பாமக தலைமை அலு​வலக முகவரி மாற்​றப்​பட்​டுள்​ளது. உண்​மை​யில் தேர்​தல் ஆணை​யம் கடிதம் அனுப்​பியது பாமக தலை​வருக்​குத்​தான். ஆனால், தேனாம்​பேட்​டைக்கு கடிதம் போகாமல், திலக் தெரு​வுக்கு சென்​றுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *