
நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்னும் அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை.
நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி.
நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர்.
இங்கே கனமழை என்பது 6.45 மி.மீ – 115.5 மி.மீ மழையளவைக் குறிக்கிறது.
இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…
இன்று காலை 10 மணி வரை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 16, 2025