
‘லோகா’ வெற்றிக்கு பின்னால் இருக்கும் அபாயம் என்னவென்று ஜீத்து ஜோசப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
உலகளவில் மலையாள திரைப்படமான ‘லோகா: சாப்டர் 1’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை முன்வைத்து முன்னணி இயக்குநரான ஜீத்து ஜோசப் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், “ஒரு திரைத்துறையில் வேறு வேறு ஜானரில் படங்கள் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் ஒரே ஜானரில் படம் சூப்பர் ஹிட் ஆனது என்றால், அனைவருமே அதே மாதிரி படம் பண்ண ஓடுகிறார்கள்.