• September 16, 2025
  • NewsEditor
  • 0

உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ எடை பிரிவில் ஜாஸ்மின் லம்போரியாவும், 48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மினாக்ஷியும் தங்கம் வென்று அசத்தி இருக்கின்றனர். 

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உலக குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் (செப்.15) நடைபெற்ற 57 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மினும், போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவும் மோதி இருகின்றனர்.

ஜாஸ்மின் லம்போரியா

இதில் ஜாஸ்மின் லம்போரியா 4-1 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை ஜூலியாவை வீழ்த்தி தங்கம் வென்றிருக்கிறார்.

யார் இந்த ஜாஸ்மின் லம்போரியா? 

2001 ஆகஸ்ட் 30 அன்று ஹரியானா மாநிலத்தின் பிவானியில் பிறந்தவர் ஜாஸ்மின் லம்போரியா. தற்போது அவருக்கு 24 வயது. 

ஜாஸ்மின் லம்போரியாவின் தாத்தா, மாமா என எல்லோருமே குத்துச்சண்டையில் வல்லவர்கள்.

அவரது பெரிய தாத்தா கேப்டன் ஹவா சிங் ஆசியப் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம் வென்று அசத்தியவர்.

முன்னாள் தேசிய சாம்பியன்களும் அவரது மாமாக்களுமான சந்தீப் சிங் மற்றும் பர்விந்தர் சிங் ஆகியோரே அவருக்குப் பயிற்சி அளித்திருக்கின்றனர்.

2021 ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் 2022 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றிருந்திருந்தார்.

ஆசியப் போட்டிகளின் காலிறுதியிலும் பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் சுற்றிலும் வெளியேறிய ஜாஸ்மின் லம்போரியா வாய்ப்பு கிடைத்தும் தன்னால் எதுவும் செய்ய முடியாமல் போனதை என்ணி மனம் வருந்தி இருந்தார்.

இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா
ஜாஸ்மின் லம்போரியா

தற்போது தனது 3-வது உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே ஜாஸ்மின் தற்போது தங்கம் வென்று அசத்தி இருக்கிறார். 

அதேபோல மகளிர் 48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மினாக்ஷியும், கஜகஸ்தான் வீராங்கனை நஸிம் கியாஜாய்பேவும் மோதினர்.

இதில் மினாக்ஷி 4-1 என்ற கணக்கில் நஸிமை வீழ்த்தி தங்கம் வென்றிருக்கிறார்.

யார் இந்த மினாக்ஷி? 

ஹரியானாவில் உள்ள ரூர்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மினாக்ஷி. 24 வயதுடைய மினாக்ஷியின் தந்தை ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்.

அவரது குடும்பத்தில் குத்துச்சண்டையில் ஈடுபடும் முதல் நபர் இவர்தான். 2017 ஆம் ஆண்டில், சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 2018 இல் நடந்த கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டியில் பட்டத்தையும் வென்றிருக்கிறார். 

இந்திய வீராங்கனை மினாக்ஷி
மினாக்ஷி

பின்னர் 2019 இல் இளைஞர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியனானார். அதேபோல 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் சீனியர் நேஷனல்ஸில் தங்கம் வென்றிருக்கிறார். 

எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வரும் மினாக்ஷி தற்போது உலகக் குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்று வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். 

தங்கம் வென்று அசத்திய இந்தச் சிங்கப் பெண்களுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.    

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *