
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் `இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மெனேன், ஷாலினி பாண்டே எனப் பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கருங்காலி மாலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தனுஷ், “நான் அணிந்திருப்பது என்ன மாலை என சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் என் பாட்டியைப் பார்க்க நான் சென்றிருந்தேன்.
அப்போது என் தாத்தாவின் புகைப்படத்தில் இந்த மாலை இருந்தது. அந்த மாலையைப் பற்றி நான் என் பாட்டியிடம் விசாரித்தேன். அவர் ` இது உங்க தாத்தா 30 வருஷம் ஜெபம் பண்ணின மாலை’ எனச் சொன்னார்.
அதை நான் எடுத்துக்கொள்ளட்டுமா எனக் கேட்டதும் என் பாட்டி தாத்தா புகைப்படம் முன் சென்று, ̀இங்க பாருங்க, இந்தப் பேரன்தான் வந்து மாலையைக் கேட்கிறான்’னு சொல்லி எனக்கு விபூதி வைத்து அந்த மாலையையும் அணிவித்தார்.
அன்று முதல் என் முன்னோர்களும், அவர்களுடைய ஆசீர்வாதமும் என்னுடன் இருப்பதாகவும் என்னைப் பாதுகாப்பதாகவும் எனக்குத் தோன்றும்.
பலரும் இதைப் போட்டால் அது நடக்கும், இது நடக்கும் எனச் சொல்கிறார்கள். இது என்னுடைய தாத்தாவுடையது, எனக்கு ஒன்றும் ஆகாது.” எனப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…