
சென்னை: மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித் தரப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னானது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் உரிய வசிப்பிடம் இல்லாமல் புயல்வெள்ள பாதிப்பில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை பாதுகாக்கும் விதமாக, கடற்கரையோரப் பகுதிகளில் 2 லட்சம் புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்று 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 116, முதல்வர் ஸ்டாலினுக்கு ஞாபகமிருக்கிறதா?