
சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிரான வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை போலீஸார் அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனத்தின் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதியது. அதையடுத்து தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும், இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளதாகவும் மதுரை ஆதீனம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.