
2025ம் ஆண்டிற்கான மலையாளம் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையும் மலையாள நடிகர் மோகன்லால்தான் தொகுத்து வழங்குகிறார்.
இந்த சீசனில் அதிலா (Adhila Nasarin) மற்றும் நூரா (Fathima Noora) இருவரும் தன்பால் ஈர்ப்பாளர்கள் என மலையாள பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன.
சகப்போட்டியாளரான லஷ்மி என்பவர் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து, “இவையெல்லாம் நம் சமுதாயத்தில் வரவேற்கக்கூடாது. இவற்றை பிக்பாஸ் போன்ற சர்வதேச பொது மேடைகளில், நிகழ்ச்சிகளில் ‘நார்மலைஸ்’ செய்ய வேண்டியதில்லை. அவர்களை யாரும் வீட்டில்கூட சேர்க்க மாட்டார்கள்” என்று பிக்பாஸ் வீட்டிற்குள் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் வார இறுதியில் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேசிய மோகன்லால், தன் ஈர்ப்பாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போட்டியாளர் லஷ்மியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் மோகன்லால், “தன்பால் ஈர்ப்பாளர்களாக இருப்பதும், எதுவாக இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இதைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது.
யாராக இருந்தாலும் எல்லோரும் மனிதர்கள்தான், எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் இங்கு வாழ்வதற்கு உரிமை இருக்கிறது.
"Whether someone is straight, lesbian, or gay, it's their choice. Everyone has the right to live their life as they see fit. No one should be questioned about it; first, respect humans. @Mohanlal Sir, the way you handled this is truly amazing! #BiggBossMalayalam" pic.twitter.com/pNVOPNoTHE
— Ꮇᴀᴅʜᴀɴ (@_MadhanKMurali) September 14, 2025
நீங்கள் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறலாம்
உங்களுக்கு தன்பால் ஈர்ப்பாளர்கள் விஷயத்தில் உடன்பாடில்லை என்கிறீர்கள். நானும், இந்த நிகழ்ச்சியும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான கருத்தையே உறுதியாக வெளிப்படுத்துகிறோம்.
உங்களுக்கு உடன்பாடில்லாத கருத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் ஏன் நீங்கள் பங்கேற்கிறீர்கள்? அவர்களை யாரும் வீட்டில் சேர்க்க மாட்டார்கள் எனச் சொல்ல உங்களுக்கென்ன உரிமை உள்ளது? நான் அவர்களை என் வீட்டிற்குள் விடுவேன் உங்களால் அவர்களுடன் இருக்க முடியாவிட்டால், நீங்கள் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறலாம்” என்று மோகன்லால் கண்டித்துப் பேசியிருக்கிறார்.
தன்பால் ஈர்ப்பாளர்கள், LQBTQக்கு ஆதரவான மோகன்லாலின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டைப் பெற்று வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs