• September 16, 2025
  • NewsEditor
  • 0

நாக்பூர்: மத்​திய அரசு எத்​த​னால் கலந்த பெட்​ரோலை (E20) விற்​பனை செய்​வதற்கு அதிக முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கிறது. இதனால், கச்சா எண்​ணெய் இறக்​குமதி குறை​யும் என்​பதுடன் கார்​பன் வெளி​யேற்​றத்தை குறைக்​க​வும் இந்த நடவடிக்​கையை மேற்​கொண்​ட​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மேலும், கரும்பு மற்​றும் மக்​காச்​சோளத்தை பயி​ரிடும் விவ​சா​யிகளுக்கு எத்​த​னால் கலப்பு மூலம் அதிக வரு​வாய் கிடைக்​கும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எனினும், எத்​த​னால் கலப்​பால் மைலேஜ் மற்​றும் வாக​னங்​கள் பாதிக்​கப்​படு​வ​தாக பல்​வேறு விமர்​சனங்​களை மோட்​டார் வாகன துறை நிபுணர்​கள் முன்​வைக்​கின்​றனர். குறிப்​பாக, நிதின் கட்​கரி​யின் மகன்​கள் நடத்தி வரும் இரண்டு முன்​னணி எத்​த​னால் நிறுவனங்​கள் பயன்​பெறவே இந்த திட்​டத்தை நடை​முறைப்​படுத்​தி​யுள்​ள​தாக நிதின் கட்​கரி மீது குற்​றச்​சாட்​டு​கள் சுமத்தப்பட்டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *