
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று (செப்.16) டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குரல் கொடுத்து வந்தார். கடந்த செப்.5-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி பரபரப்பை ஏற்படுத்திய செங்கோட்டையன், பழனிசாமிக்கு 10 நாள் கெடுவும் விதித்தார். இதற்கிடையில் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். அவரைத் தொடர்ந்து பழனிசாமியும் இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.