
சென்னை: தமிழக பாஜகவில் அமைப்புரீதியாக நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் 25 அணி பிரிவுகளுக்கு மாநில அமைப்பளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அப்பிரிவுகளுக்கு மாநில இணை அமைப்பாளர்கள், மாநில செயலாளர்களை நியமித்து நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மகளிர் அணி தலைவராக கவிதா காந்த் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணை தலைவர்களாக சங்கீதா மதிவாணன், மதிவதனகிரி, மீனா வினோத்குமார், புவனேஸ்வரி, சரண்யா, லீலாவதி உள்பட 8 பேரும், மாநில பொதுச் செயலாளர்களாக நதியா சீனிவாசன், வித்யா ரமேஷ், தேன்மொழி உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.