• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​துக்கு 16-வது நிதிக் குழு​வின்கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்​டும் என அமைச்​சர் சிவசங்​கர் வலியுறுத்தியுள்ளார். டெல்​லி​யில் மத்​திய மின்​சா​ரம், வீட்டு வசதி மற்​றும் நகர்ப்​புற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் மனோகர் லால் மற்​றும் இணை அமைச்​சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் தலை​மை​யில் மாநில மின்​துறை அமைச்​சர்​களின் கூட்​டம் நேற்று நடை​பெற்றது.

இதில் அமைச்​சர் எஸ்​.எஸ். சிவசங்​கர் பேசி​ய​தாவது: தமிழக எரிசக்​தித் துறை பல முக்​கிய சாதனை​களை​யும் சீர்​திருத்த முயற்​சிகளை​யும் மேற்​கொண்​டுள்​ளது. தமிழகத்​தில் அடுத்த 5 முதல் 7 ஆண்​டு​களில் மின் உற்​பத்​தி, தொடரமைப்பு மற்​றும் பகிர்​மானத்​துக்​காக ரூ.2 லட்​சம் கோடிக்​கும் மேற்​பட்ட முதலீடு தேவைப்​படு​கிறது, இதற்​காக மத்​திய, மாநில அரசுகள் இணைந்து செயல்​படும் புதிய விரி​வான கடன் மறுசீரமைப்பு திட்​டம் கொண்டு வர வேண்​டும். 16-வது நிதிக் குழு​வின்கீழ் சிறப்பு நிதி ஒதுக்​க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *