
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிக் காட்டுவேன் என்று கூறினார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.270.75 கோடியில் 193 நிறைவடைந்த பணிகளை தொடங்கிவைத்தும், ரூ.562.14 கோடியில் 1,114 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 2,23,013 பயனாளிகளுக்கு ரூ.2,052.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இவ்விழாவில் 85,711 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.