
சென்னை: வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு, அரசியலமைப்பின் விழுமியங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை பாதுகாப்பதில் மகத்தான வெற்றி என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வக்பு திருத்தச் சட்டம் 2025 குறித்த உச்ச நீதிமன்றத்தின் மைல்கல் உத்தரவு, நீதி, அரசியலமைப்பின் விழுமியங்கள், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை பாதுகாப்பதில் மகத்தான வெற்றியாகும். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மற்றும் மற்றவர்களின் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நியாயம், சமத்துவம், மத சுதந்திரம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும் விதிகளை நிறுத்திவைத்துள்ளது.