
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “செங்கோட்டையன் விவகாரத்திற்கு அவர் தான் பதில் அளிப்பார். பழனிசாமி டில்லிக்கு போறாது அவர் விஷயம்.
எனது நிலைப்பாடு, குறித்து பல இடங்களில் கூறிவிட்டேன். இந்த தேர்தலில், அ.ம.மு.க வெற்றி முத்திரை பதிக்கும். நாங்கள் மற்றவர்கள் போன்று, அகங்காரம், ஆணவத்தில் கூறவில்லை. அ.ம.மு.க அங்கம் வகிக்கும் கூட்டணி, ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க-வில் பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, அந்த கூட்டணியை அ.ம.மு.க ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. 75 மற்றும் 50 வருட கட்சிக்கு இணையாக, அ.ம.மு.க வளர்ந்து விட்டது. அரசியல் ஆரூடம் கூறும் அளவுக்கு நான் ஞானி கிடையாது” என்றார்.