• September 15, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல்லுக்கும் அதிமுக-வுக்கும் பிரிக்கமுடியாத பிணைப்பு உண்டு. ஏனென்றால், 1972-ல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தான் அதிமுக-வின் முதல் வேட்பாளரான மாயத்தேவரை நிறுத்தி சுமார் 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவைத்துக் காட்டினார் எம்ஜிஆர்.

அந்தத் தேர்தலில் சுயேச்​சைகளுக்காக ஒதுக்​கப்பட்ட சின்னமான இரட்டை இலை மாயத்​தேவ​ருக்கும் ஒதுக்​கப்​பட்டு, அது தனது முதல் தேர்தலிலேயே வெற்றிக் கணக்கை தொடங்​கியதும் திண்டுக்​கல்லில் தான். அதிமுக-வுக்கும் திண்டுக்​கல்​லுக்கும் இப்படியொரு பந்தம் இருப்​பதாலோ என்னவோ, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக-வால் ஜொலிக்க முடிய​வில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *