
இனி வரும் காலங்களில் திருமணங்களைக் காப்பாற்றக்கூடிய, அழகாக வழிநடத்தக்கூடிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி இங்கே பகிர்கிறார் உளவியல் நிபுணர் அசோகன்.
”நம்முடைய திருமண அமைப்பை ’ரீ டிசைன்’ செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அது என்ன ரீ டிசைன் என்று சொல்வதற்கு முன்னால், இதுநாள் வரைக்கும் ஒரு தாம்பத்தியத்தைச் சம்பந்தப்பட்ட கணவன் – மனைவியின் அன்பைத் தாண்டி வேறு என்னென்ன விஷயங்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் உறவுகள் சேர்ந்து ஒரு தாம்பத்தியத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன. உறவுகளால் பிரச்னைகள் எப்படி சகஜமோ, அதேபோல நன்மைகளும் நிறைய. அவற்றில் இதுவும் ஒன்று. இப்போது பெரும்பான்மையான உறவுகள் நம்முடைய குடும்ப விஷயங்களில் தலையிட தயாராக இல்லை.
நேரமின்மை ஒருபக்கம். நேரம் ஒதுக்கி தலையிட்டால் ‘தங்கள் மரியாதை கெட்டுவிடும்’ என்கிற அச்சம் ஒருபக்கம். அதனால், உறவுகளிடம் இருந்து தாம்பத்தியம் கை மீறிப் போய்விட்டது. சில நேரம், நெருங்கிய சொந்தங்களாலேயே ஒரு தாம்பத்தியம் உடைவது தனிக்கதை.
’சிஸ்டர் சொல்றத கேளுடா’ நண்பர்களும் தாம்பத்தியத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.

பல காலங்களாக, பல வீடுகளில் குழந்தைகள்தான் தாம்பத்தியங்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள்… கொண்டிருக்கிறார்கள். இனிமேல் ஒரு தாம்பத்தியத்தை குழந்தைகளால்கூட காப்பாற்ற முடியாது போலிருக்கிறது. இதற்கு ஆதாரமாக எத்தனையோ செய்திகளைக் கடந்து கொண்டிருக்கிறோம்.
உதாரணமாகக் கூற முடியும். இதைச் சமீப காலமாக நாமெல்லாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இதுபோன்ற இடங்களில், சகிப்புத்தன்மையால் மட்டும்தான் ஒரு தாம்பத்தியத்தைப் பிரியாமல் காப்பாற்ற முடியும்.
செக்ஸ் தாம்பத்தியத்தின் அடிப்படையாக இருந்தது. அது தற்போது போய்விட்டது. செக்ஸில் பிரச்னைகளே இல்லாதபோதுகூட, திருமணம் தாண்டிய உறவுகள் ஏற்பட்டு விடுகின்றன. திருமணத்தின் உண்மையான அடிப்படையே லீகல் கான்ட்ராக்ட் தான்.
இருவரிடமும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும், சகித்துக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் தாம்பத்தியங்களின் ஆயுள் நீட்டிக்கும். இல்லையென்றால் முறிந்துபோகும்.

இதைப் படிக்கும் சிலர், ’எல்லாத்துக்கும் காரணம் இன்னிக்கு இருக்கிற பெண்கள்தான்’ என்று சுலபமாகச் சொல்லி விடலாம். சில விதிவிலக்குகளைத் தவிர, அதில் உண்மை கிடையாது. இன்றைய பெண்கள் தங்கள் சுயவிருப்பு, வெறுப்புடன் வாழ்வதுதான் காரணம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டீர்களென்றாலும், அதுவும் 100 சதவிகிதம் தவறுதான்.
ஏனென்றால், இன்றைய பெண்கள், ஆண்டான் – அடிமை தாம்பத்திய உறவை வெறுத்து, நல்ல நண்பர்களாக வாழ்கிற தாம்பத்திய வாழ்க்கையை எதிர்பார்க்கிறார்கள்.
அதைப் புரிந்துகொள்ளாமல், இப்போதும் ‘எங்கம்மா மாதிரி; எங்க பாட்டி மாதிரி’ என்று வாழ்க்கைத்துணைக்குப் பதில் ஓர் அடிமையை ஆண்கள் மனதுக்குள் எதிர்பார்த்தாலும், இன்றைய பெண்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.
இனிமேல், கணவனும் மனைவியும் நல்ல நண்பர்களாக இருப்பது மட்டும்தான் தாம்பத்தியத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி. இந்த நட்புதான் திருமணத்தின் ரீ டிசைன்” என்று முடித்தார் உளவியல் நிபுணர் அசோகன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…