• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வட சென்னை மற்​றும் அதை ஒட்​டிய திரு​வள்​ளூர் மாவட்ட பகு​தி​களில் நேற்று அதி​காலை விடிய விடிய பலத்த இடி, மின்​னலுடன் கூடிய கனமழை கொட்​டித் தீர்த்​தது. சென்​னை, புறநகரில் கடந்த சில தினங்​களாக கடும் வெயில் நிலவி வந்​தது. இரவு நேரங்​களில் கடும் புழுக்​கம் நில​வியது. நேற்று முன்​தின​மும் காலை முதலே வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​டது. காலை நேரத்​தில் லேசான தூரல் நில​வியது.

பின்​னர் மாலை, இரவில் புழுக்​க​மான சூழல் நில​வியது. இந்​நிலை​யில், நேற்று அதி​காலை பலத்த காற்று மற்​றும் இடி, மின்​னலுடன் கனமழை பெய்​தது. காலை 6 மணிக்கு மேலும் மழை நீடித்​தது. இதனால் பெரும்​பாலான சாலைகளில் மழைநீர் தேங்​கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *