
சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் நாளை காலை அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.