
திருச்சி: அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு மனதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறுகனூரில் மதிமுக சார்பில் இன்று (செப்.15) நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திரையுலகில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திரமான விஜய்க்கு பெரும்பான்மையான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விஜயை பார்க்க துடிப்பதை திருச்சியில் காண முடிந்தது.