
இரண்டாம் உலக்கப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷனில் தயாரான இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகும்.
இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சில் சென்னையில் நடைபெற்றது. அதில், இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் கலையரசன், தினேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் தினேஷ், “தண்டகாரண்யம் ரொம்ப சீரியசான ஒரு கதை. இதை கமர்ஷியலாக மாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் எனக்கு ஒரு முக்கியக் கதாப்பாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. என்னுடைய வேலையை நான் சரியாக செய்திருப்பேன் என நம்புகிறேன்.
என்னுடைய கடைசி மூன்று படங்களிலுமே என் வேலையை இலகுவாக்க முயன்றேன். குக்கூ படத்தில் என் கதாப்பாத்திரம் மிகவும் அழுத்தமானது.
அதில் மிகவும் சிரமப்பட்டு நடித்திருப்பேன். அதிலிருந்து எனக்குக் கிடைத்த வாழ்க்கைப் பாடமாக ஒன்றை எடுத்துக்கொண்டுதான் கடைசி மூன்று படங்களிலும் அதை முயன்றேன்.
உதாரணமாக மூச்சு விடுவதை நாம் உணரமாட்டோம். அது இயல்பாக வந்துச் செல்லும். அப்படித்தான் என் நடிப்பை வடிவமைத்துக்கொண்டேன்.
அது லப்பர் பந்தில் பெரும் வெற்றிப் பெற்றது. அப்படித்தான் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறேன். லப்பர் பந்தில் எனக்கு கொடுத்த ஆதரவுப் போல இந்தப் படத்துக்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…