
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளிப்பது ஒழிக்கப்பட்டுள்ளதால், தீவிரவாதிகள் பதுங்கு குழிகளில் தங்குகின்றனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்ட மலைப் பகுதியில் கடந்த வாரம் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் உணவுப் பொருட்கள், சிறிய கேஸ் அடுப்பு, குக்கர், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் இருந்தன.
இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தீவிரவாதிகள் முன்பு உள்ளூர் மக்கள் ஆதரவுடன் அவர்கள் வீட்டில் பதுங்கியிருந்தனர். தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், தற்போது தீவிரவாதிகளுக்கு யாரும் ஆதரவு அளிப்பதில்லை.