• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் தடுப்​பூசி செலுத்​திய நிலை​யில் 40 நாட்​களுக்​குப் பிறகு ரேபிஸ் நோயால் பாதிக்​கப்​பட்ட ஆட்டோ ஓட்டுநர், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். சென்னை ராயப்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்​தவர் முகமது நஸ்ருதீன் (50). இவர் ஆட்டோ ஓட்​டுந​ராகப் பணி​யாற்றி வந்​தார்.

கடந்த ஜூலை 28-ம் தேதி பெசன்ட் சாலை​யில் உள்ள மீர்​சாகிப்​பேட்டை மார்க்​கெட்​டுக்கு அருகே இருக்​கும் ஆட்டோ ஸ்டேண்​டில், ஆட்​டோவை எடுப்​ப​தற்​காக அதில் ஏற முயன்​றார். அப்​போது ஆட்​டோவுக்கு கீழே படுத்​திருந்த தெரு​நாய் ஒன்று திடீரென முகமது நஸ்​ருதீனின் முழங்​கால் பகு​தி​யில் கடித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *