
புதுடெல்லி: வர்த்தக செய்திகளை வெளியிடும் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா, வங்கதேசம், மியான்மர் மற்றும் பூடான் அருகேயுள்ள தனித்தனியான பகுதிகளை இணைக்கும் வகையில் சீன எல்லை அருகே 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்து, 9,984 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைத்துள்ளது. தற்போது கூடுதாக 5,055 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.